கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 20 ஆண்டு சிறை!

கோவையில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கடையின் உரிமையாளரான கனகராஜ் (76) என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கோவை: கோவையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 76 வயதான முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் மோர் மிளகாய் வாங்க மளிகை கடைக்கு வந்த 10 வயது சிறுமியை, கடையின் உரிமையாளரான கனகராஜ் (76)  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகி வீட்டிற்கு வந்ததால், அதுகுறித்து விசாரித்தபோது நடந்ததை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், கனகராஜை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கனகராஜூக்கு (76) 20 ஆண்டு சிறை தண்டனையும், 20ஆயிரம்  அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம்  நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...