கோவையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் அறிமுக விழா - இலவச உணவு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கு இலவச வாகனம்!

கோவையில் ஒசோடெக்ஸ் என்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் இலவச உணவு வழங்கும் தன்னார்வ அமைப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு இலவசமாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

கோவை: கோவையில் உள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனத்தின் புதிய வாகனத்தை கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார். 

தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் ,கோவையில் கடந்த இருபது வருடங்களாக மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பரதன் என்பவர், ஒசோடெக்ஸ் என்ற புதிய நிறுவனம் வாயிலாக எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.



விவசாயம், குறுந்தொழில் உள்ளிட்ட அனைத்து வணிக துறைகளில் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கி உள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய வாகனம் குறித்து நிறுவன உரிமையாளர் பரதன் கூறியதாவது, சக்தி வாய்ந்த 10 kwh பேட்டரி, ஒரு சார்ஜில் 525 கிமீ தூரம் வரை செல்ல முடியும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே புதிய முயற்சியாக முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

புளுடூத், ஜி.பி.எஸ்.உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வாகனம் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே கோவையில் இலவச உணவு வழங்கி வரும் ‘பசியாற சோறு’ அமைப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு, இருசக்கர வாகனத்திலேயே சென்று உணவு வழங்கும் வகையில், புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...