கோவையில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு!

கோவையில் இன்று ஒன்று முதல் 5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு பிடித்த மிக்கி மவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடமணிந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர்களுக்கு மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடமணிந்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 



தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் வகுப்புகள் துவங்கியது. அதன்படி கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளில் சில குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவதற்கு அடம் பிடிப்பர். 



இந்நிலையில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும் உற்சாக இமோஜி வரைபடங்களை கொண்டும் இனிப்புகள் வழங்கி குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். 



இதனால் குழந்தைகளும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். 



மேலும் முதல் நாள் என்பதால் பெற்றோர்களும் பள்ளிகளுக்கு வந்து மாணவர்களை பள்ளியில் விட்டு சென்றனர். 



ஆசியரியர்களும் குழந்தைகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...