வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை - கோவையில் பரபரப்பு!

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த முகாசிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டச் சென்ற வனத்துறை வாகனத்தை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வனத்துறை ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே முகாமிட்டுள்ள யானையை விரட்ட சென்ற வனத்துறையினரின் வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட ஆலாந்துறை அடுத்த கரடிமடை, நரசிபுரம் வழியாக ஒற்றை காட்டு யானை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல தனது வலசை பாதையில் சென்ற ஒற்றை காட்டு யானை ஆலாந்துறை முகாசிமங்கலம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்ததாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு வனத்துறையினர் விரைந்து சென்று டார்ச் விளக்கும், மற்றும் ரோந்து வாகனம் மூலம் கண்காணித்தனர். 



அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெளியே வந்த காட்டு யானை அங்கு வந்த வனத்துறையினர் வாகனத்தை சேதப்படுத்தியது. 



இதில் வனத்துறையினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில், வாகனத்தை விட்டு வெளியேறி தப்பிச்சென்ற வனத்துறையினர் மீண்டும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஒற்றை காட்டு யானை மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. பலத்த சேதமடைந்த வனத்துறையினர் வாகனம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...