இடையர்பாளையம் கார் ஒர்க்‌ஷாப்பில் தீ விபத்து - 6 கார்கள் தீயில் கருகி சேதம்!

இடையர்பாளையம் அருகே செயல்பட்டு வரும் வென்ஸ் டிசோசா என்பவருக்கு சொந்தமான கார் ஒர்க்‌ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரில் தீப்பிடித்து எரிந்த நிலையில், அடுத்தடுத்த கார்களுக்கும் தீ பரவியதில் 6 கார்கள் தீயில் கருகி நாசமானது.



கோவை: கோவை மாவட்டம் இடையர்பாளையம் அருகே கார் பழுது நீக்கும் கடை அருகே நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகே இருந்த 6 கார்கள் தீயில் எரிந்து நாசமானது. 

கோவை புளியகுளம் அடுத்த கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த மகிமை ஜூன் என்பவரது மகன் வென்ஸ் டிசோசா (31). இவர் முக்தார் என்பவருடன் இணைந்து, குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் கார் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார். 

இவரது கடையில் அரவிந்த் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது பி.எம்.டபுல்யூ சொகுசு காரை பழுது பார்க்க கொடுத்துள்ளார். அதனை எடுக்க வந்த அரவிந்த காரை எடுத்து சோதனை செய்து விட்டு, கடையின் அருகே நிறுத்திவிட்டு கடை உரிமையாளரான டிசோசாவிடம் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. 



அப்போது திடீரென அரவிந்தின் சொகுசு கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதையடுத்து கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களுக்கும் தீ பரவியது. 



அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும், தீயை அணைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 



இதனையடுத்து, விரைந்து வந்த கோவைப்புதூர் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 



இந்த தீ விபத்தில் மொத்தம் 6 கார்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...