திருப்பூரில் மின்வாரிய அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் மன்னரை பகுதியில் சீரற்ற மின் விநியோகம் காரணமாக வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறி பொதுமக்களுடன் இணைந்து பாஜகவினர் மன்னரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மன்னரையில் முறையான மின் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பாஜகவினர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



திருப்பூர் மன்னரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்வெட்டு மற்றும் சீரற்ற மின்விநியோகம் காரணமாக வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 



இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி மன்னரை மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்களுடன் இணைந்து பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த முற்றுகை போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...