செந்தில்பாலாஜி கைதும்‌, சிகிச்சையும்‌ - அமலாக்கத்துறை வழக்கறிஞர்‌ ரமேஷ்‌ கூறுவது என்ன?

அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞரான ரமேஷ், செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும் மறுத்ததன் காரணமாகவே கைது செய்யும் சூழலுக்கு அமலாக்கத்துறை தள்ளப்பட்டது என தெரிவித்தார்.



சென்னை: விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும்‌ செந்தில்பாலாஜி மறுத்ததாக அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

அமைச்சர்‌ செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர்‌ என்‌.ரமேஷ்‌ செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்‌சர்‌ செந்தில்பாலாஜி ஒத்துழைப்பு வழங்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்‌ சம்மனை பெறவும்‌, விசாரணை ஆவணங்‌களில்‌ கையெழுத்திடவும்‌ மறுத்தார்‌.

அதிகாரிகளிடம்‌ ஒத்துழைக்கவில்லை இதனால்‌, செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டிய நிலைக்கு அமலாக்கத்துறை தள்ளப்பட்டது. ஆனால்‌, கைது செய்ய போகிறோம்‌ என்றதும்‌ செந்தில்பாலாஜி à®…à®´ ஆரம்பித்துவிட்டார்‌. தரையில்‌ புரண்டு நெஞ்சுவலிப்பதாக கதறினார்‌. எனவே, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள்‌ அழைத்‌துச்‌ சென்றனர்‌.

மருத்துவர்கள்‌ பரிசோதனை செய்துவிட்டு, அவரின்‌ உடல்நலம்‌ நல்ல நிலையில்‌ இருக்கிறது. அவர்‌ பயப்படுவதாலும்‌, பதட்டமடைவதாலும்‌ ரத்த அழுத்தம்‌ அதிகமாக உள்ளது என்றனர்‌. ஆனால்‌, இன்று (நேற்று) காலையில்‌ சூழ்நிலை மாறி, செந்தில்பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனைகள்‌ செய்‌யப்படுகிறது. அவருக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறப்பட்டது. 

இதனால்‌, மத்திய அரசின்‌ இஎஸ்‌ஐ மருத்‌துவமனையில்‌ இருந்து மருத்துவர்கள்‌ குழு வந்து, செந்தில்‌ பாலாஜியை பரிசோதித்தனர்‌. அவர்கள்‌, செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து வேறுவிதமாக கருத்து தெரிவித்தனர்‌. நீதிபதி மருத்துவமனைக்கு வந்து செந்தில்‌ பாலாஜியிடம்‌ விசாரித்தார்‌. அப்போது செந்தில்பாலாஜி இயல்பாக பேசினார்‌.

அமலாக்கத்துறை அதிகாரிகள்‌ தன்னை துன்புறுத்தியதாக கூறினார்‌. அப்போது நீதிபதி, உங்களை எந்த வழக்கில்‌ கைது செய்துள்ளனர்‌ என்று தெரியுமா?'' என்று கேட்டபோது. அவர்‌, தெரியும்‌. அமலாக்கத்துறை அதிகாரிகள்‌ சம்மன்‌ கொடுத்ததாக கூறினார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...