சுந்தராபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் உரிமையாளருக்கு தெரியாமல் விற்பனை - 5 பேர் மீது வழக்கு!

சுந்தராபுரம் அருகே பவர் டூல்ஸ், உதிரி பாக கிடங்கில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை உரிமையாளருக்கு தெரியாமல், விற்பனை செய்த நந்தினி, சிராஜ், ஜாகீர் மற்றும் பொருட்களை வாங்கிய பாத்திமா, ரோசட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



கோவை: சுந்தராபுரத்தில் உள்ள தனியார் கிடங்கிலிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை உரிமையாளருக்கு தெரியாமல் விற்பனை செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கோவை ராம்நகர் சரோஜினி வீதி பகுதியை சேர்ந்த ரக்ஷிதா (46). இவரும் அவரது நண்பரும் சேர்ந்து கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பவர் டூல்ஸ் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். 

இதற்கான கிடங்கு சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் அமைந்துள்ளது. இவர்களுக்கு சொந்தமான மூன்று கடைகள் கோவை நஞ்சப்பா சாலை பகுதியில் உள்ளது. கடந்த சில மாதங்களாக கிடங்கு இருப்பில் உள்ள உதிரி பாகங்களுக்கும், கடையில் உள்ள உதிரி பாகங்களின் பட்டியலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்து வந்தது. 

இந்த சமயத்தில் நிறுவனத்தில் வேலை பார்த்த நந்தினி மற்றும் சிராஜ் ஆகியோர் வேலையில் இருந்து நின்று வேறு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர். தொடர்ந்து கிடங்கில் இருந்த பொருட்கள் கணக்கு குறைவாக இருந்ததால் ரக்ஷிதா ஏற்கனவே வேலை செய்த ஊழியர்களான நந்தினி மற்றும் சிராஜ் ஆகியோரை அழைத்துள்ளார். 

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் கிடங்கில் இருந்த பொருள்களை மற்றும் உதிரிபாகங்களை எடுத்து வேறு நிறுவனத்திற்கு விற்றது தெரியவந்தது. இதன் மூலம் சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரக்ஷிதா போத்தனூர் போலீஸில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய பாத்திமா, ரோசட் பொருட்களை விற்ற நந்தினி, சிராஜ், ஜாகீர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...