கோவை குற்றாலம் அருகே சாலையோர கடை மீது வேன் மோதி விபத்து - பழங்குடியின முதியவர் பலியான சோகம்!

விருதுநகரில் இருந்து கோவை குற்றாலம் நோக்கி வந்த மினிவேன் ஒன்று, கோவை குற்றாலம் சோதனை சாவடி அருகேயுள்ள கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கடையில் பொருட்களை வாங்கிய வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தை ரங்கன் என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: கோவை குற்றாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர கடையின் மீது மோதிய விபத்தில் பழங்குடி கிராம முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சாடிவயல், வெள்ளப்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்த அய்யாவு என்பவரது மகன் ரங்கன் (66). கூலி வேலை செய்து வந்த இவர் கோவை குற்றாலம் சோதனைச் சாவடி அருகேயுள்ள ரங்கராஜ் என்பவரது கடையில் பொருட்களை வாங்கச் சென்றார். 



பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்த போது, அவ்வழியாக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கோவை குற்றாலத்திற்கு வந்த மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ரங்கராஜ் கடையின் முன் பகுதியில் மோதி விட்டு அருகே நின்றுகொண்டிருந்த ரங்கன் மீது மோதியது. 



இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கன் படுகாயமடைந்தார். 



இதையடுத்து அங்கு இருந்தவர்கள் ரங்கனை மீட்டு அருகே உள்ள காருண்யா மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 

அங்கிருந்த மருத்துவர்கள் ரங்கன் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரங்கன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காருண்யா நகர் போலீசார், மினி வேன் ஓட்டுநரான விருதுநகர் செட்டிகுறிச்சியை சேர்ந்த விஜய் (24) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆதரவற்ற தனது 18 வயது பேத்தியை கவனித்து வந்த ரங்கன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...