திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த பாம்புகளை பத்திரமாக மீட்ட வனத்துறை!

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் இருந்த முட்புதர்களுக்கு அருகே பாம்புகள் சுற்றித்திரிந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், பாம்புகளை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், அதனை வனப்பகுதியில் விட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். 

திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் பணிக்கு வந்துள்ளனர். 

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறத்தில் பாம்புகள் சென்றது தெரியவந்தது, இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 



தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 2 பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் ஜேசிபி வாகனம் மூலம் புதர்கள் இன்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...