திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு, பெரிய கடை வீதியில் உள்ள பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மிதிவண்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பணிக்காக விலையில்லா மிதிவண்டிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் பயிலும் உயர்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. 



இதன்படி, திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்காக மிதிவண்டிகள் உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



விரைவில் இவை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...