கோவையில் ஒன்றுகூடிய திமுக கூட்டணி கட்சிகள் - தலைவர்கள் பேசியது என்ன?

பாஜகவை கண்டித்து கோவையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, செந்தில்பாலாஜியை முடக்கி விட்டால், கொங்கு மண்டலத்தில் தாமரை மலரும் என கனவு காண்கின்றனர் என்றார். திராவிடர் கழக தலைவர் வீரமணி, பாஜகவின் இச்செயல் ஒரு மனிதருக்கு எதிரானது அல்ல, தத்துவத்திற்கு எதிரானது என தெரிவித்தார்.



கோவை: கோவையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள், பாஜகவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். 

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. செந்தில் பாலாஜி கைதை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தேசிய எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கோவையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என ஜூன் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. 



தொடர்ந்து, கோவை மாநகர் சிவானந்தா காலனியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, à®®.தி.முக.பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் ஆர். முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே. எம். காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 



இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் கோவை மட்டுமல்லாது திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் கலந்து கொண்டனர். திமுக மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். கண்டன பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து பேசினர்.

கோவை கண்டன பொதுக் கூட்டத்தில் ஆ.ராசா பேசுகையில், 



அதிகாரத்தில் இருப்பவர்கள் அநீதி இழைக்கும்போது நாடே ஸ்தம்பித்துவிடும். அதனை எதிர்கொள்ளக் கூடிய ஒரு சில தலைவர்களின் முதல்வர் ஸ்டாலினும் ஒருவர். கலைஞர் கோட்டத்தை திறக்க பீகார் முதல்வர் வர இருக்கிறார். இந்தியாவின் அரசியல் சட்டம், மதச்சார்பின்மையை காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் முதல்வர் ஸ்டாலின் தான் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என்னிடம் கூறினார். 

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தமிழ்நாட்டில் தான் நடத்த வேண்டும் என விரும்பினேன். ஆனால் உங்கள் முதல்வர் ஸ்டாலின் தான் பீகாரில் நடத்த வேண்டும் என தன்னிடம் கூறியதாக நிதிஷ் குமார் என்னிடம் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அமைச்சரை பழி வாங்கி முடக்கப் பார்க்கிறார்கள். சிறு ஊழல் வழக்குகளை காரணம் காட்டி எதிர்க்கட்சி தலைவர்களை முடக்கப் பார்க்கிறார்கள்.



ஆனால் பிரதமரின் நண்பர் அதானி செய்துள்ள முறைகேடுகளை அமெரிக்காவைச் சார்ந்த ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அறிக்கை அம்பலப்படுத்தியது. அதற்கு விளக்கம் கேட்டபோது பதில் அளிக்காமல் பிரதமர் மௌனம் சாதித்தார். மௌனம் சாதித்தால் நீங்களும் ஃப்ராட் என நான் கூறினேன். எங்கள் அமைச்சரை முடக்கிவிட்டால் தாமரை மலர்ந்திவிடும் என கனவு காண வேண்டாம். 

அடுத்த ஆண்டு கலைஞரின் நூற்றாண்டை கோவையில் கொண்டாட வேண்டும். அப்போது அடுத்த இந்திய பிரதமர், தமிழக முதல்வர், 10 மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். அந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசியதாவது, 



இவை எல்லாம் மனிதருக்கு எதிரானது அல்ல. தத்துவத்திற்கு எதிரானது. அடுத்த வாரம் பீகாரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் இருந்து கவனத்தை திசை திருப்ப தான் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள். திமுக கூட்டணியை அழிக்க வேண்டும் என்கிற சதி இதன் பின்னர் உள்ளது. 

எதிர்ப்பிலே வளர்ந்த இயக்கம் தான் திமுக. இதனால் திமுகவை அசைத்து பார்த்துவிட முடியாது. கர்நாடகாவில் இன்று நடைபெற்று வரும் மாற்றங்கள் இந்தியா முழுவதும் வரப்போகிறது. அதற்கு திமுக தலைமை முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. அதனால் தான் திமுகவை குறிவைத்து செயல்படுகிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசியதாவது, 



தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 10 கட்சிகளின் கூட்டணி தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. அதற்கு வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின் இருந்து வருகிறார். 

குற்றச்சாட்டுகள், வழக்கு தொடர்வதில் தவறில்லை. இதுவரை என்ன வழக்கு என்று தெரிவிக்கப்படவில்லை. சம்மன் அனுப்பாமலே அமலாக்கத் துறை கையெழுத்து போடச் சொல்லி இருக்கிறார்கள். 

அமைச்சர் மிக கொடூரமாக நடத்தப்பட்டு தாக்கப்பட்டு இருக்கிறார். அமைச்சரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

ஆனால் உண்மையான விசாரணை தற்போது வரை நடக்கவில்லை. இந்த ஆட்சி ஆறு மாதங்களோ, ஓர் ஆண்டோ இருக்கலாம். ஆனால் அடுத்த ஆட்சியில் இந்த அதிகாரிகள் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். 

அமலாக்கத்துறை அவர்களுக்கு தொடர்பு இல்லாத வழக்கை கையில் எடுத்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை சோனியா காந்தி தொடங்கி எதிர்க்கட்சி தலைவர்களை மட்டுமே விசாரித்து வருகிறது. 

பாஜக இதற்கு எல்லாம் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். கொங்கு மண்டலத்தில் அடையாளம் காணக்கூடிய ஒரு தலைவர் செந்தில் பாலாஜி. 11 நாடாளுமன்ற தொகுதியை செந்தில் பாலாஜி வெல்வார். அதனால் பொய் வழக்கை வைத்து அவரை முடக்கிவிடலாம் என பாஜக நினைக்கிறது, இவ்வாறு அவர் கூறினார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது, 



பாஜகவின் அராஜகத்தை இன்று அனைவரும் பார்த்து வருகிறார்கள். மாநில அரசின் உரிமைகள் கேள்வி கேட்கப்படுகின்றன. 

முதல்வர் ஸ்டாலின் குறி வைக்கப்படுகிறார். அவர்களுக்கு தனிப்பட்ட பகை அல்ல. அவர்களின் கொள்கையை முதல்வர் எதிர்ப்பதால் அவருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி வேலை செய்கிறார்கள். 

முதல்வரை முடக்க வேண்டும் என தான் இவை அனைத்தையும் செய்கிறார்கள். இது தனிப்பட்ட பகை அல்ல, கொள்கை போர். தேர்தல் களத்தில் நாம் வெற்றி பெற்று காட்ட வேண்டும். மத்திய அமைச்சர்கள் 33 பேர் மீது இத்தகைய குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் மட்டும் எவ்வாறு பதவியில் தொடர்கிறார்கள். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. 

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தை தொடங்கி வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என்பது அவர்களுக்கு கோபம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து வைக்க வேண்டும் என்பது தான் சனாதனத்தின் ஒரே நோக்கம். இதற்கு எதிராக தமிழ்நாடு நீண்டகாலம் போராடி உள்ளது. 

சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் 71% பேர் ராகுல்காந்தியும், 27% பேர் மோடியும் பிரதமராக வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த சரிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அண்ணாமலையும் தான் காரணம். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. 

இந்த நாட்டில் புதிய கூட்டணியை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் வேலை செய்து வருகிறார். அது தான் பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் செந்தில் பாலாஜியை கைது செய்ய அவர் என்ன தேசத்துரோகியா. குற்றச்சாட்டு இருக்கிறது என்றால் வழக்கு நடத்துங்கள். அதைவிட்டு நள்ளிரவில் கைது செய்ய என்ன சட்டம் அனுமதிக்கப்படுகிறது, இவ்வாறு அவர் கூறினார். 

சி.பி.எம் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, 



மோடி தமிழ்நாட்டில் கை வைத்தால் தேன் கூட்டில் கை வைப்பதை போன்றது. அதற்கு எடுத்துக்காட்டாக 48 மணி நேரத்தில் இந்த கண்டன பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்கட்சிகள் தளர்வு அடைந்துவிடாமல் பாஜக பார்த்துக் கொள்கிறது. 

அதிமுக பரிதாபத்திற்குரிய கட்சி. அண்ணாமலையை ஜெயக்குமார் கண்டித்து கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் எனக் கூறினார். ஆனால் அதிமுகவினர் ஆளுநரை பார்த்து அமைச்சரை நீக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அதிமுகவினருக்கு ஆளுநரின் அதிகாரம் என்னவென்று தெரியாதா. இன்று அதிமுக பாஜகவின் தொங்கு சதையாக மாறிவிட்டது. 

அமைச்சராக பதவி ஏற்பவர் இலாகா கூறி பதவி ஏற்பதில்லை. இலாகா ஒதுக்குவது என்பது முதல்வரின் அதிகாரம். இந்த அரிச்சுவடி கூட தெரியாமல் ஒருவர் எவ்வாறு ஆளுநராக இருக்க முடிகிறது. சி.பி.ஐ, அமலாக்கத் துறை பாஜகவின் துணை அமைப்புகளாக மாறிவிட்டன. டெல்லியில் உங்கள் கதை வேகும். தமிழ்நாட்டில் உங்கள் பாட்சா பலிக்காது, இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது, 



திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அல்ல. சங் பரிவார அமைப்புகளை குழி தோண்டி புதைக்கும் வரை இந்த கூட்டணி தொடரும். தேர்தல் ஆணையம் மற்றும் சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் மோடியால் உருவாக்கப்பட்டது அல்ல. அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகள். 

கடந்த காலங்களில் இவை சுயாதீனமாக செயல்பட்டவை. ஆனால் இன்று பாஜகவின் கருவியாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியை இனி ஹிட்லர் எனக் கூப்பிட வேண்டும். அமித்ஷாவை முசோலினி அல்லது கோயபெல்ஸ் என்று அழைக்க வேண்டும். இந்த அமைப்புகளை எல்லாம் அடிமையாக மாற்றிவிட்டார்கள். 

முதல்வர் எடுக்க வேண்டிய முடிவுகளை ஆளுநர் எடுப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு சம்பளம் கொடுப்பது தமிழ்நாடு அரசு தான். ஆளுநர் மாளிகைக்கு செலவு செய்வது மாநில அரசு தான். அரசியலமைப்பு சட்டத்தின் படி மாநில அரசிடமிருந்து சம்பளம் பெறும் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார். 

தமிழ்நாடு அரசுக்கு எதிராக சர்வாதிகார ரீதியில் போட்டி அரசு நடத்த ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். பெண், பழங்குடி மற்றும் விதவை என்பதால் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை திறக்க குடியரசு தலைவரை கூட அழைக்கவில்லை. கிண்டியில் அரசு மருத்துவமனையை திறக்க முதல்வர் குடியரசு தலைவரை அழைத்தார். ஆனால் அதற்கு தடை விதிக்கப்பட்டு குடியரசு தலைவர் கலந்து கொள்ளவில்லை, à®‡à®µà¯à®µà®¾à®±à¯ அவர் கூறினார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, 



பாஜகவின் உண்மையான இலக்கு செந்தில் பாலாஜி அல்ல. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தான். அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று தான் இவ்வாறு செய்கிறார்கள். 

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை செய்யாமல் முதல்வரை தடுக்கவே மோடியும் அமித்ஷாவும் இவ்வாறு செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என முதல்வர் தெரிவித்தார். 

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பது தான் பாஜகவின் கனவு. அதற்காக மாநிலம் வாரியாக காங்கிரசை பலவீனப்படுத்துகிறார்கள். காங்கிரஸ் உடன் இருக்கும் கட்சிகளை பலவீனப்படுத்துகிறார்கள். அதற்காக விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறார்கள். 

சிதறி கிடக்கும் எதிர்க்கட்சிகள் இணையும் சூழல் உருவாகி வருகிறது. அதற்கான முதல் அடியை எடுத்து வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் தான். பாஜகவை அரசியல் ரீதியாக மட்டுமல்ல, கொள்கை ரீதியாகவும் எதிர்ப்பவர் முதல்வர் ஸ்டாலின். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். ஆளுநராக அல்லாமல் ஆர்.எஸ்.எஸ் ரவி ஆக செயல்படுகிறார். 

முதல்வர் அனுப்பும் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். முதல்வர் அரசாணை பிறப்பிக்க தயாராகிவிட்டார். முதல்வர் ஒரு அடி கூட பின்வாங்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக இருப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜியை முடக்கினால் தான் கொங்கு மண்டலத்தில் ஏதாவது செய்ய முடியும் என கணக்கு போடுகிறார்கள்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வெற்றி கூட்டணியை அமைத்து வழிநடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல. முதல்வருக்கு வைக்கப்பட்ட செக். முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கையும் சங் பரிவாரங்களின் குரல் வளையை நெறிப்பதாக இருக்கிறது.

சனாதன சக்திகளுக்கு திராவிட இயக்கம் தான் சவாலாக உள்ளது. அதிலும் குறிப்பாக திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் சிம்ம சொப்பமனமாக உள்ளார்கள். இது திமுகவுக்கான நெருக்கடி எனக் கூட்டணி கட்சிகள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், இவ்வாறு அவர் கூறினார். 

மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா பேசியதாவது, 



கொங்கு மண்டலம் பாஜகவின் கோட்டை என்பதை தகர்த்தவர் செந்தில் பாலாஜி. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியிலும் திமுக கூட்டணி தான் வெல்லும். கொங்கு மண்டலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம் என கனவு கண்டவர்களின் ஆசை நிறைவேறாது. 

இதனால் சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை வேட்டை நாய்களைப் போல ஏவி பழி வாங்குகின்றனர். ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை. பாஜக அனுதாபி சத்ய பால் மாலிக் பிரதமர் மோடிக்கு ஊழலைப் பற்றி எந்த கவலையும் இல்லை எனக் கூறினார்.

கர்நாடகாவில் அடைந்த தோல்வியைப் போல தமிழ்நாட்டிலும் பாஜக தோல்வி அடையும். ஏழை மக்கள் வயிற்றில் அடிக்கக்கூட அரசாக பாஜக அரசு இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...