கோவை அருகே கண்டெய்னர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலியான சோகம்!

கோவை எல்.அன்.டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தருணன் (21) என்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை எல்.அன்.டி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வரதராஜபுரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் பூபாலகிருஷ்ணன் என்பவரது மகன் தருணன் (21). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தருணன் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எல் அண்ட் டி பைபாஸ் ஜல்லிக்கட்டு மைதானம் அருகே வந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தருணன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அப்போது, அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு புலனாய்வு போலீசார் கண்டெய்னர் லாரி ஓட்டுனரான சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (42), என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...