கோவையில் வரும் ஜூலை 1-ல் நடிகை ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி!

கோவையில் வரும் ஜூலை 1ஆம் தேதி ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் நடிகை ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பேசிய ஆன்ட்ரியா, இந்த கச்சேரியில் இளையராஜாவின் பாடல்களும், தான் பாடிய பாடல்களும் இடம்பெறும் என்றார்.



கோவை: கோவையில் வரும் ஜூலை 1ம் தேதி ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியாவின் இசைக்கச்சேரி வரும் ஜூலை மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது.



இந்த இசைக் கச்சேரி குறித்த செய்தியாளர் சந்திப்பு சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் மாலில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த ஆன்ட்ரியா,



கோலாலம்பூரில் கடைசியாக இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. இந்த கச்சேரி நன்றாக நடைபெற்றது.

தொடர்ந்து கோவையில் வரும் 1ம் தேதி இசைக்கச்சேரி நடைபெறுகிறது. இந்த கச்சேரி 2 மணி நேரம் நடைபெறுகிறது. இளையராஜா பாடல்களும், நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் இடம் பெறுகிறது.

கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்துகிறோம். நடிப்பு, பாடல் எதுவுமே ஈசி இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான் வகுப்புக்கு சென்றதால் தற்போது சுலபமாக பாடுகிறேன்.

நான் கோவைக்கு பாடல் பாடத்தான் வருகிறேன். அரசியலுக்கு வரவில்லை. பெண்களை திட்டுவது போன்ற பாடல்களை நான் கேட்கமாட்டேன். மற்றவர்கள் இது போன்ற பாடல்கள் பாடினால் நான் அதுகுறித்து யோசிப்பதே இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...