துடியலூர் சூழாத்தம்மன் கோவிலில் 7 ஆம் ஆண்டு திருவிழா கோலாகலம்!

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி சூழாத்தம்மன் திருக்கோவில் 7ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் பராசக்தியாகம், சிறப்பு அலங்கார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள தொப்பம்பட்டி சூழாத்தம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் ஸ்ரீ சூழாத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 7ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் அம்மனுக்கு பராசக்தியாகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



இதன் முதல் நிகழ்வாக ஸ்ரீ விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி, விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாக வாஜசன், பஞ்ச கவ்ய பூஜை சந்த்கல்பம், கிச்சா சக்தி, ஞானசக்தி, மூல மந்திரம், மாலா மந்திர ஹோமம், மகா பூர்ணாவதி தீபாரதனையை தொடர்ந்து அம்மனுக்கு 11 விதமான அபிஷேகமும், கலச அபிஷேக அலங்கார அர்ச்சனை மகா தீபாரதனை நடைபெற்றது.



தொடர்ந்து பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...