பல்லடம் அருகே கொரியர் வேன் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்த கார் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் கொரியர் வேன் மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொரியர் வேன் மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்த விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் சி.டி.சி காலனியில் இருந்து கொரியர் ஏற்றிக் கொண்டு வந்த டாட்டா ஏஸ் கூட்ஸ் வாகனம் பல்லடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது செட்டிபாளையத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோகுல் மற்றும் கொரியர் டெலிவரி ஊழியர் ரமேஷ் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் ஆல்டோ காரில் பயணித்த நாமக்கல் பகுதியை சேர்ந்த சுஜித் மற்றும் அவரது தாய் பரமேஸ்வரி ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



4 பேர் படுகாயமடைந்த நிலையில் இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பல்லடம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...