கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சிறுவன் வயிற்றில் வெடிகுண்டு கட்டிவைத்து உள்ளதாக மிரட்டல் விடுத்த போலி வெடிகுண்டு மிரட்டல் மன்னன் பீர்முகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவையில் சிறுவனின் வயிற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியில் வசிப்பவர் சுமதி. இவரது செல்போனை வாங்கிய ஒரு நபர், தன் மனைவிக்கு போன் பண்ண வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 

அப்பொழுது அந்த செல்போனை வாங்கி கோயம்புத்தூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த அந்த நபர், தான் சிறுவனின் வயிற்றில் வெடி குண்டை கட்டி வைத்திருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருக்கின்றார்.

உடனடியாக மாநகர போலீசார் அந்த செல்போனுக்கு அழைத்து விவரங்களை கேட்டிருக்கின்றனர். அந்த செல்போனின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சிறுவனின் வயிற்றில் வெடிகுண்டு கட்டி வைத்திருப்பதாக சொன்னது, பிரபல டுபாக்கூர் வெடிகுண்டு மிரட்டல் மன்னன் பச்சை மிளகாய் என்கிற பீர் முகமது என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். மதுபோதையில் சுமதி என்ற பெண்ணிடம் இருந்து, அலைபேசியை வாங்கி மனைவிக்கு போன் செய்வதாக தெரிவித்துவிட்டு, போலீசாருக்கு போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பி இருக்கும் பீர் முகமது, இவ்வாறு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார். 

கடந்த காலங்களில் இதேபோன்று பலமுறை காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு போனில் அழைத்து வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டானது விரைவில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடும் நபர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...