பல்லடம் அருகே பட்டாவை மாற்றி வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பல்லடம் அடுத்த இடுவாய் பாரதிபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு வழங்க வேண்டிய பட்டாக்களை ஊராட்சி தலைவரும், விஏஓவும் ஆகியோர் லஞ்சம் வாங்கிக் கொண்டு வெளியூரை சேர்ந்த வேறு சமுதாய மக்களுக்கு பட்டா வழங்கியதாக கூறி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே லஞ்சம் வாங்கி கொண்டு ஊராட்சி தலைவரும், விஏஓவும் பட்டாவை மாற்றி வழங்கியதாக கூறி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் அருகே இடுவாய் பாரதிபுரம் கிராமத்தில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 1.5 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த இடத்தில் நிலமில்லா ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒன்றரை ஏக்கர் நிலத்தில் 33 நபர்களுக்கு 1.5 சென்ட் என்ற கணக்கில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

பட்டா கேட்டு 20 ஆண்டுகளாக மனு அளித்த ஒருவருக்கு கூட இங்கு நிலம் வழங்கப்படாமல் வெளியூரை சேர்ந்த நபர்களுக்கும் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே வீடு நிலம் உள்ள நபர்களுக்கும் பட்டா அளித்திருப்பது தெரியவந்த நிலையில் அப்பகுதி மக்கள் இன்று அந்த இடத்தில் குடிசை அமைக்க முயன்றனர்.



இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ராதாமணி இந்த இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் உடனடியாக அகற்றப்படும் என அறிவிப்பானை வழங்குவதற்காக வந்தபோது கிராம நிர்வாக அலுவலர் சிறை பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இடுவாய் கிராம ஊராட்சி தலைவர் கணேசன் மற்றும் இடுவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராதாமணி ஆகியோர் வெளியூர் நபர்களிடம் ஒரு பட்டாவிற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பட்டா கேட்டு மனு அளித்தும் பணம் கொடுக்காததால் எங்களுக்கு பட்டா கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறி அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.



அதேபோன்று பட்டா வழங்கப்பட்ட இடத்தில் குடில் அமைப்பதற்காக அருகிலுள்ள நீர் நிலைகளில் இருந்து கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி பெறாமல் மண் அள்ளுகின்றனர்.



இது குறித்து வருவாய்த்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் ராதாமணி என்பவரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...