பல்லடத்தில் இரும்பு உருக்காலைக்கு எதிரான தொடர் போராட்டம் - 97 வது நாளை எட்டியது!

பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை அகற்றக்கோரி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 97வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வரும் இரும்பு உருக்காலையை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் 97வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லடம் அடுத்த அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பழைய இரும்பு பொருட்களை உருக்கும் கிஸ்கால் என்ற இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.



இந்த இரும்பு ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் கடந்த 97 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் பல்லடம் வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஆலை முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வருவதாக கிராம மக்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆலையை தற்காலிகமாக மூடக்கோரி பல்லடம் வட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார்.



இந்நிலையில் இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதாகவும் நீர்நிலைகள் மாசு அடைவதால் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 97 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் சில நாட்கள் ஆலையின் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அனைத்து அனுமதிகளும் பெற்றுவிட்டதாக கூறி ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தில் கட்டிட அனுமதி பெறாமல் ஆலை இயங்குவதால் அனுப்பட்டி ஊராட்சி சார்பில் ஆலையின் கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் அளித்த உத்தரவு ஆணையை ஏற்காமல் ஆலை மீண்டும் செயல்பட்டு வருகிறது.



இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனுப்பட்டி, பணிக்கம்பட்டி, ஆறாகுளம், அய்யம்பாளையம், புளியம்பட்டி, கரடிவாவி ஆகிய கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 400க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது,



97 நாட்களாக தொடரும் பொதுமக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் லஞ்சத்தை பெற்றுக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிஸ்கால் இரும்பு உருக்கு ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் சட்ட விரோதமாக செயல்படும் ஆலைக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...