6 வருடங்களுக்கு முன் விற்ற சொத்திற்கு முழு பணம் தராத அதிமுக பிரமுகர் - மாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை தர்ணா!

கோவையில் 6 வருடங்களுக்கு முன்பு சொத்தை வாங்கிய அதிமுக நிர்வாகி புனிதா நாகராஜ் என்பவர் முழு பணத்தையும் கொடுக்காமல் உள்ளதாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சேகர் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை: கோவை அருகே சொத்தை வாங்கிய அதிமுக பிரமுகர் முழுமையான பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் இன்று அவரது மாற்றுத்திறனாளி மகன், உட்பட இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தீடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார்.



இது குறித்து அவர் கூறியதாவது, தனது தாயார் சொத்தை கடந்த 6 வருடங்களுக்கு முன் அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜ் என்பவருக்கு விற்பனை செய்தார்.

விற்பனை செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டும் தனக்கும் சகோதர சகோதரிக்கும் கொடுத்து விட்டு மீதமுள்ள 50,000 ரூபாயை புனிதா நாகராஜ் தராமல் இருக்கிறார்.

தற்போது தாயார் இறந்த நிலையில், மீதமுள்ள பணம் குறித்து கேட்டால் இழிவாக பேசுவதாகவும் பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார். மேலும் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கி அதிமுகவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் இருக்கும் வீட்டை காலி செய்ய வைப்பதாகவும் எங்கு சென்றாலும் தங்களை பற்றி குற்றம் கூறி அவப்பெயரை உண்டாக்குகிறார்.

மேலும் தன்னை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் தங்கள் மீது புகார் தெரிவித்து தன்னை கைது செய்ய முயன்றார். எனவே நானும் குடும்பத்தினரும் என்ன செய்வதென்றே தெரியாமல் நிர்கதியாய் நிற்கிறோம்.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜிடம் இருந்து பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...