இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல் 25 வயதுக்குட்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட மாணவர்கள் 60-க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் பங்கேற்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.


Coimbatore: ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறவுள்ள உலகத்திறன் போட்டிகளில் (World Skills Competition) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களைத் தேர்வு செய்வதற்கான இந்தியத் திறன் போட்டிகள் (India Skills Competition) 2027-க்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

இந்தியத்திறன் போட்டியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக விளங்கி வருவதாகவும், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய மற்றும் உலகத் திறன் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் பல்வேறு பதக்கங்களையும் விருதுகளையும் வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியத் திறன் போட்டியில் தமிழ்நாடு ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. World Skills Shanghai China 2026-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

இப்போட்டியின் மூலம் இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. மாவட்ட, மாநில, மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு உலகத் திறன் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படும்.

16 முதல் 25 வயதுக்குட்பட்ட (திறன் பிரிவைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும்) கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் இதர கல்வி நிறுவன மாணவர்கள், இளம் தொழில்முனைவோர் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 60-க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் தகுதியானவர்கள் https://www.skillindiadigital.gov.in/india-skills.competition என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. போட்டிகள் தொடர்பான இதர விவரங்களை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்டத்திறன் பயிற்சி அலுவலகம், கோயம்புத்தூர்-29, தொலைபேசி: 9488462613 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...