கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும்‌ தூய்மை பணிகள்‌, மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ மற்றும்‌ தார்ச்சாலை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.95க்கு உட்பட்ட போத்தனூர்‌, சாய்‌ நகா்‌ பகுதியில்‌ மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மை பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.95க்கு உட்பட்ட போத்தனூர்‌, சாய்‌ நகா்‌ பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அப்போது, அப்பகுதியில்‌ புதிதாக மழைநீர் வடிகால்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்னா்‌, வார்டு எண்‌.95க்கு உட்பட்ட போத்தனூர்‌, சத்திரம்‌ வீதியிலுள்ள மழைநீர் வடிகால்‌ தார்வாரும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.95க்கு உட்பட்ட போத்தனூர்‌, சத்திரம்‌ வீதியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, உள்‌ மற்றும்‌ புற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும்‌ சிகிச்சை முறைகள் ஆய்வு செய்தார்.

‌பின்னர், அறுவை சிகிச்சை மையம்‌, மருந்து மாத்திரைகளின்‌ இருப்புகள்‌ மற்றும்‌ பதிவேடுகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளிடம்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து கேட்டறிந்தார்.



தொடர்ந்து, என்‌.பி.இட்டேரி பகுதியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.21 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ சுற்றுச்சுவர்‌ கட்டுமான பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.62-க்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம்‌, எஸ்‌.என்‌.வி. கார்டன்‌ பிரதான சாலையில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ ரூ.166.59 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



அதனை தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.62-க்கு உட்பட்ட நேதாஜி நகா்‌ பிரதான சாலையில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் ‌கீழ்‌ ரூ.199 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 377.70 மீட்டர் தொலைவிற்கு தார்சாலை அமைக்கப்பட்ட இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், வார்டு எண்‌.65-க்கு உட்பட்ட அனன்யா அபார்ட்மென்ட்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகா்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் ‌கீழ்‌ நடைபெற்று வரும், தார்சாலை பணிகளை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒப்பந்த பணிகள்‌ இறுதி செய்யப்பட்டு தார்சாலை பணிகள்‌ தொடங்கியுள்ள பகுதிகளில்‌ சாலை பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையாளர்‌ அறிவுறுத்தினார்‌.



பின்னர்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.66க்கு உட்பட்ட அம்மன்குளம்‌, கருப்பராயன்‌ கோவில்‌ வீதியில்‌ ஸ்வச்‌ பாரத்‌ மிஷன்‌ (SBM) திட்டத்தின்கீழ்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பொதுகழிப்பிடம்‌ கட்டுமானப்‌ பணிகள், வார்டு எண்‌.6க்கு உட்பட்ட ராஜீவ்‌ காந்தி நகரில்‌ ஸ்வச்‌ பாரத்‌ மிஷன்‌ திட்டத்தின் கீழ்‌ ரூ.26 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பொது கழிப்பிடம்‌ கட்டுமான‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...