நெடுஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் பொதுமக்கள் மறியல்!

கோவை போத்தனூர் - வெள்ளலூர் பிரதான சாலை, சித்தன்னபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கோவை போத்தனூர் - வெள்ளலூர் பிரதான சாலை, சித்தன்னபுரம் பகுதியில் சாலையோரங்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சுமார் 41 வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளது. 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சித்தன்னபுரம் பகுதிக்கு வந்த சாலை ஆய்வாளர் ஜெலின் தலைமையிலான அதிகாரிகள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். 

அப்போது பொதுமக்கள் சாலை ஆய்வாளரிடம் மேலும் ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆய்வாளர் அனுமதி வழங்காததால் நீண்ட நேரம் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் முன் பகுதிகளை மட்டும் அதிகாரிகள் இடித்துச் சென்றனர். 

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீரென நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இரவில் வெள்ளலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் போலீசார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். 

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...