துடியலூரில் பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி சந்திப்பில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



கோவை: துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டது. 



கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி ஜங்சன் பகுதியில் பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.



இதில் கட்சியின் கிழக்கு மண்டல தலைவர் M.புவனேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் பிரச்சார பிரிவை சார்ந்த மாவட்ட பேச்சாளர்கள் முரளிதரன், மாநில செயலாளர் வேணுகோபால், மாவட்டத் தலைவர் விசாலாட்சி, மாவட்டத் துணைத் தலைவர் இளைய பாரதி, மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.மணி, மாவட்ட செயலாளர், பழையூர்பாலு, மாவட்டச் செயலாளர் துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



இதில் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...