தடாகம் அருகே ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்த போலீசார்!

கோவை தடாகம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த நாகேஷ் என்ற 60 வயது முதியவர் நேற்றைய தினம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால், தடாகம் போலீசாரே உடலை அடக்கம் செய்துள்ளனர்.



கோவை: தடாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இறந்த ஆதரவற்ற நாகேஷ் என்ற முதியவரின் உடலை தடாகம் காவல்துறையினரே அடக்கம் செய்தனர்.

தர்மபுரி காரியாமங்களத்தைச் சேர்ந்தவர் 60 வயதான நாகேஷ். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக கோவை தடாகம் பகுதியில் வந்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நாகேஷ் வயது மூப்பின் காரணமாக இறந்துள்ளார். 

அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது சித்தாப்பா மகன் காளியப்பன் என்பவர் உடலை பெற்றுக் கொள்வதாகவும் ஆனால் அடக்கம் செய்ய பணம் இல்லை என தெரிவித்துள்ளார்.



இதையடுத்து தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளார் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் கார்த்தி, முனியப்பன், பழனிசாமி ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பிரேத பரிசோதனை முடித்து ஜீவசாந்தி அறக்கட்டளை உதவியுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...