கோவை மக்களை மகிழ்விக்க 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது பாம்பே சர்க்கஸ்!

ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனமான தி கிரேட் பாம்பே சர்க்கஸ் கோவை மக்களை மகிழ்விப்பதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது. வரும் ஜூன் 23 வெள்ளிக்கிழமை முதல் 50 நாட்கள் வ.உ.சி மைதானத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.



கோவை: தி கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்களால் கண்டு மகிழப்படும் புகழ் பெற்ற கிரேட் பாம்பே சர்க்கஸ் 7 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மக்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறது. 

ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனமான இந்நிறுவனம் கிட்டத்தட்ட 102 ஆண்டுகளை இத்துறையில் நிறைவு செய்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள சர்க்கஸ் நிறுவனங்களில் இந்த நிறுவனம் மட்டும் தான் தென் ஆப்பிரிக்கா, துபாய், பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் அழைக்கப்பட்டு அந்நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது.



கோவை மாநகரில் பலமுறை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் ஆதரவை பெற்ற இந்நிறுவனம் கடைசியாக 2017 வ.உ.சி மைதானத்தில் அதன் நிகழ்ச்சியை நடத்தியது. 



தற்போது அதே இடத்திற்கு வியக்கவைக்கும் புது சாகசங்களுடன், புது குழுவுடன் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் காண உள்ளது.

இதுகுறித்து கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் பார்ட்னராக உள்ள சஞ்சீவ் கூறியதாவது,







நாங்கள் எங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை 23.6.23 முதல் அடுத்த 1 மாதத்திற்கு மேல் நடத்த உள்ளோம். ஒவ்வொரு நாளிலும் மதியம் 1 மணி, 4 மணி மற்றும் மாலை 7 மணி என மூன்று காட்சிகள் இடம்பெறும். ஒவ்வொரு காட்சியும் 2 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். அவற்றில் 30க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இம்முறை 15க்கும் அதிகமான புதிய சாகசங்கள் நிகழ்வில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் முதல் முறையாக உலக சர்க்கஸ் போட்டிகளில் பங்கு பெற்று வெண்கல பதக்கம் பெற்ற எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மணிப்பூரிலிருந்து எட்டு உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவும் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய புகழ்பெற்ற கலைஞர்களும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பலவிதமான சாகசங்களை செய்து காண்போரை ஆச்சரியத்தில் உள்ளாக்க காத்திருக்கின்றனர்.

பார்வையாளர்களின் சௌகரியத்திற்காக சாகசம் நடைபெறும் கூடாரம் குளிரூட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த கூடாரம் நெருப்பு மற்றும் மழையை எதிர்க்கக் கூடியது.

டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான அறிவிப்புகள் விளம்பரங்களாக வெகு விரைவில் வெளியாகும். டிக்கெட்டுகளின் விலை ரூ.100 முதல் ரூ 400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

400ரூபாய் டிக்கெட்டுகளுக்காக தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற ரூ.100, 200, 300 ஆகிய டிக்கெட்டுகளை நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே வ.உ.சி மைதானத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.400 டிக்கெட்டை முன்பதிவு செய்ய அழைக்க வேண்டிய எண் 889360 6308, 87788 38082, 87142 85256.

இந்த நிகழ்வில் கிளப் ஜக்லிங்க், ரோலர் ஆக்ட், ஜிம்னாஸ்டிக் கண்டேஜியன், ஃபுட் ஜக்லிங்க், டவர் பேஸ்கட்பால், ஆக்குரோபேட்டிக் ஹுள்ளா ஹூப், ஐக்காரியன் டியோ ஆக்ட், கண்டார்சன், ஆன்ட்டிபோட் ஆக்ட், ரிதமிக் ஹுள்ளா ஹூப், பாலிங் நைப் வெரைட்டி, ஸ்பியர் பேலன்ஸ், 60 அடி உயரத்தில் பேலன்ஸ் இன் டிராபீஸ், அக்ரபட்டிக் ஸ்கேட்டிங் மற்றும் பல சாகசங்கள் இடம் பெறுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...