திருப்பூரில் அமைச்சர், எம்.எல்.ஏ, மேயர் இடையே பனிப்போர் - தொகுதி பிரச்சினையை கவனிப்பதில்லை என குற்றச்சாட்டு!

திருப்பூரில் திமுகவை சேர்ந்த மேயர் , எம்எல்ஏ , அமைச்சர் ஆகியோருக்கு இடையே உள்ள பனிப்போரின் காரணமாக தொகுதி பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை என குற்றம்சாட்டிய கழிவுநீர் எதிர்ப்பு கூட்டியக்கத்தினர், கழிவுநீர் சுத்திக்கரிப்பு நிலைய திட்டத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை நாளை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கண்டித்து நாளை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 30,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் 45 வது வார்டு பகுதி முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். 

இந்நிலையில் இன்று கழிவுநீர் சுத்தகரிப்பு நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது,



திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் , மாநகராட்சி மேயர் மற்றும் மாவட்ட அமைச்சர் இடையே நிலவும் பனிப்போரின் காரணமாக தங்கள் வாழ்வாதார பிரச்சனை பாதிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிக்கு அமைச்சர் சாமிநாதனுக்கும் இடையே உள்ள பனிப்போரின் காரணமாக இப்பிரச்சனை குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், இதுவரை தொகுதிக்குள் வந்த தங்களை சந்தித்து பிரச்சனைகள் குறித்து கேட்கவில்லை.

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிடம் இது குறித்து தெரிவித்த போது மாநகராட்சி பிரச்சனைக்குள் தான் தலையிட முடியாது என தெரிவித்தள்ளார்.

மாநகராட்சி மேயர் இத்திட்டத்தை செயல்படுத்தியாக வேண்டிய சூழலில் இருப்பதாக கட்டாயப்படுத்துவதாகவும், மாநகராட்சி ஆணையாளர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் தங்கள் வார்டு பகுதிகளுக்குள் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் கொண்டுவர முடியாது என அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அப்பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததன் காரணமாக கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.

மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 

திமுகவை சேர்ந்த எம்எல்ஏ மேயர் மற்றும் அமைச்சரிடைய உள்ள பனிப்போரின் காரணமாக தங்கள் பகுதி மட்டுமல்லாது திருப்பூர் மாநகரம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

தமிழக முதல்வரும் திமுக தலைவரும் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் திமுக கைவிடும் நிலைக்கு செல்லும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக நாளைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேயர், எம் எல் ஏ மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளக்கூடிய ஆலோசனைக் கூட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினரையும் அழைக்க வேண்டும் என கூட்டு இயக்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

மாவட்ட நிர்வாகத்தின் முடிவின்படி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். இஸ்லாமியர்களுக்கு எதிராக அதிமுக கையாண்ட அதே நடவடிக்கைகளை திமுகவும் கையாளுகிறதா என்ற சந்தேகம் இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...