திருப்பூர் மாநகராட்சி, திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த சமூக வலைத்தளங்களில் பொய் பிரச்சாரம் - மேயர் குற்றச்சாட்டு!

திமுக அரசுக்கும், திருப்பூர் மாநகராட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.



திருப்பூர்: திமுக அரசுக்கும், திருப்பூர் மாநகராட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் பெறப்பட்ட தகவலில். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் 440க்கு துடைப்பம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. 

இந்த நிலையில் திருப்பூரில் அதிமுக மற்றும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 



திருப்பூர் மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்று பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி துடைப்பம் உள்ளிட்ட தூய்மை பணிக்கான பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது. 

ஒட்டு மொத்தமாக 10 பொருட்கள் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு குறைவான தொகை குறிப்பிட்டவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான இ-டென்டர் மற்றும் விளம்பரம் ஆகியவை அரசு வழிகாட்டுதல் படி முறைப்படி கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் நடைபெற்று உள்ளது. 

மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்டதில் குறைவான தொகை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் துடைப்பம் வாங்கியது 440 ருபாய் என்ற தவறான தகவல் பரப்பப்படுகிறது. 

மூங்கில் குச்சிகளால் ஆன ஆளுயுர துடைப்பத்திற்கான தொகையாக குறிப்பிட்டுள்ள நிலையில் வேண்டுமென்று திருப்பூர் மாநகராட்சிக்கும், திமுக அரசுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த பொய் பிரச்சாரத்தை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை பரப்புபவர்களை வன்மையான கண்டிக்கிறேன். இது தொடர்பாக அனைத்து ஆவணங்களும் முறைப்படி சரியானதாக இருக்கிறேன்.

இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடையே விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொது மக்களுக்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ இதில் சந்தேகம் இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த ஆவணங்களை பார்த்து தெளிவு பெற்றுக் கொள்ளலாம். 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களது ஆட்சி காலத்தில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றாததன் காரணமாக அவருக்கு இந்த விவரம் தெரியவில்லை. 

அதேபோல் பக்குவப்படாத பாஜகவும், பொறுப்பற்ற அதிமுக அமைச்சர்களும் இதனை பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றி பொறுப்பேற்ற பின்னர் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறது. 

மக்கள் விரும்பக்கூடிய ஒரு மாநகராட்சி நிர்வாகமாக தற்போது மாறி இருக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாததால் இது போன்ற பொய்யான தகவல்கள் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...