யோகா ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது - சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து!

யுனெஸ்கோவில்‌ நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில்‌ சிறப்புரையாற்றிய சத்குரு ஜக்கி வாசுதேவ், சர்வதேச யோகா தினம்‌ என்பது ஒரு கொண்டாட்ட தினம்‌ கிடையாது. இது உறுதி ஏற்கும்‌ தினம்‌. நீங்கள்‌ உடல்‌ ரீதியாகவும்‌, மன ரீதியாகவும்‌ சிறந்த நிலையில்‌ இருந்து, இந்த உலகிற்கு சிறந்த பங்களிப்பை அளிக்க உறுதி ஏற்கும்‌ தினமாகும்‌ என்றார்.



கோவை: யோகா என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன்‌ 21) பாரிஸில்‌ உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில்‌ 'விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்‌' என்ற தலைப்பில்‌ ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்  சிறப்புரையாற்றினார்‌.



அப்போது அவர்‌ பேசியதாவது, யோகா பாரத தேசத்தில்‌ தோன்றியது என்பதை எண்ணி நாம்‌ அனைவரும்‌ பெருமை கொள்ளலாம்‌. ஆனால்‌, அனைவரும்‌ ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்‌.

அதிகப்படியான தேசப்பற்று கொண்ட சிலர்‌ என்னுடைய இந்த கருத்துடன்‌ முரண்படுவார்கள்‌ என எனக்கு தெரியும்‌. இருந்தாலும்‌ சொல்கிறேன்‌, யோகா என்பது நம்‌ பாரத தேசத்திற்கு சொந்தமானது இல்லை. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது.

ஏதோவொன்றை நாம்‌ புதிதாக கண்டுபிடித்தால்‌ அதை ஒரு குறிப்பிட்ட மக்கள்‌ குழுவிற்கு சொந்தம்‌ என கூறலாம்‌. ஆனால்‌, ஏற்கனவே இருக்கும்‌ உண்மையை கண்டு உணர்ந்தால்‌ அது உங்களுக்கோ அல்லது எனக்கோ சொந்தம்‌ இல்லை. முழுமை அடைய விரும்பும்‌ ஒவ்வொரு மனிதனிக்கும்‌ அந்த உரிமை உள்ளது.

சர்வதேச யோகா தினம்‌ என்பது ஒரு கொண்டாட்ட தினம்‌ கிடையாது. இது உறுதி ஏற்கும்‌ தினம்‌. நீங்கள்‌ உடல்‌ ரீதியாகவும்‌, மன ரீதியாகவும்‌ சிறந்த நிலையில்‌ இருந்து, இந்த உலகிற்கு சிறந்த பங்களிப்பை அளிக்க உறுதி ஏற்கும்‌ தினமாகும்‌. 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில்‌ சத்குருவின்‌ சிறப்புரையை தொடர்ந்து யுனெஸ்கோவின்‌ அமைதிக்கான HEMEVEHN (Artist for 8909) டாக்டர்‌ குய்லா க்ளாரா கெஸாஸ்‌ அவர்கள்‌ சத்குருவுடன்‌ கலந்துரையாடினார்‌.

மனித குலத்திற்கு யோகாவின்‌ தேவை தொடர்பான அவரின்‌ கேள்விக்கு சத்குரு பதில்‌ அளிக்கையில்‌, வசதியான தேசமான அமெரிக்காவில்‌ ஒவ்வொரு இரண்டு அமெரிக்கர்களில்‌ ஒருவர்‌ தனிமையில்‌ வாடுவதாக மருத்துவ துறையினர்‌ கூறுகின்றனர்‌. 

உலகின்‌ மக்கள்‌ தொகை 8.4 பில்லியனாக இருக்கும்‌ சூழலில்‌ அவர்கள்‌ தனிமையில்‌ வாடுவது எந்த வகையில்‌ சரியாக இருக்கும்‌? இதற்கு காரணம்‌, ஒவ்வொரும்‌ தங்களை சுற்றி ஒரு தனித்துவமான சுவரை எழுப்பி கொள்கிறார்கள்‌. 

தங்களின்‌ சுய பாதுகாப்பிற்கு என உருவாக்கிய அந்த சுவரை விட்டு அவர்களால்‌ வெளி வர முடியாமல்‌ சிக்கி போனதால்‌ தனிமையில்‌ தவிக்கிறார்கள்‌. இன்று நீங்கள்‌ சுய பாதுகாப்பிற்காக என உருவாக்கும்‌ இதுபோன்ற சுவர்கள்‌ நாளை உங்களின் சுய சிறையாக மாறிவிடும்‌.

தனிமையில்‌ வாடுவது மன நோயின்‌ முதல்‌ அறிகுறி. அதனால்‌, யோகாவின்‌ தேவை இப்போது மிக மிக அவசியமாகிறது. யோகா என்றால்‌ சங்கமம்‌. அங்கு தனிமை என்ற பேச்சிற்கே இடமில்லை.

மேலும்‌ மனிதர்கள்‌ சந்திக்கும்‌ அனைத்து பாதிப்புகளும்‌ உடல்‌ அல்லது மனம்‌ ஆகிய இரண்டின்‌ மூலம்‌ மட்டுமே வருகின்றன. எனவே உங்களுக்கும்‌ இவை இரண்டிற்கும்‌ இடையில்‌ ஒரு சிறிய இடைவெளியை உருவாக்கி கொள்ளுங்கள்‌. 

அப்படி செய்தால்‌, பாதிப்பு என்ற ஒரு விஷயமே உங்கள்‌ வாழ்வில்‌ இருக்காது என்றார். 

இதை அனுபவப்பூர்வமாக வாழ்வில்‌ கொண்டு வரும்‌ விதமாக, ஈஷா க்ரியா என்ற எளிமையான யோக பயிற்சியை சத்குரு  பங்கேற்பாளர்களுக்கு பரிமாறினார்‌.

யுனெஸ்கோவில்‌ நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்‌ யுனெஸ்கோவின்‌ டைரக்டர்‌ ஜெனரல்‌ ஆட்ரி ஆசுலே, நிரந்தர பிரதிநிதி மற்றும்‌ தூதர்‌ திரு. விஷால்‌ சர்மா உள்ளிட்டோர்‌ பங்கேற்று பேசினர்‌. 

மேலும்‌, பாலஸ்தீன்‌, செக்‌ குடியரசு, மொரோக்கோ, பெரு, ரோமானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள்‌ என சுமார்‌ 1,500க்கும்‌ மேற்பட்டோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...