துடியலூர் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் மறியல்!

கோவை துடியலூரில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் அருகில் உள்ள சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: துடியலூரில் ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் அருகில் உள்ள சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் ரயில்வே கேட் அருகே வடக்கு வட்டார போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகனங்கள் மற்றும் எப்.சி., காட்டுவது உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 4 சக்கர வாகனங்கள் வெள்ளக்கிணர் அடுத்துள்ள உருமாண்டம்பாளையம் சாலையில் நிறுத்தி பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பணிகளுக்கு வரும் வாகனங்கள் துடியலூர் ரயில்வே கேட் ஒட்டியுள்ள சாலையில் நிறுத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அவ்வழியை பயன்படுத்தி வரும் அருகில் உள்ள நகர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து இச்சாலையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அச்சாலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட 4 சக்கர வாகனங்கள் நிறுத்திருந்தனர். 



இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. 



இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு வந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தகவலறிந்து அங்கு வந்த துடியலூர் காவல் துறையினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள உருமாண்டம்பாளையம் சாலைக்கு செல்லுமாறு கூறி அப்புறப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...