காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா - புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு!

காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் சங்கத்தின் பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். மேலும் புதிய நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



திருப்பூர்: காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் இளங்கோவன் கலந்து கொண்டார். 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து ரோட்டரி உறுப்பினர்களாக ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். 



மேலும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

விழாவின் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓடந்துறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...