தேர்தல் வரும் போது மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் தெரிகிறோம் - திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கம் குற்றச்சாட்டு!

கோவில்களில் ஆபாச நடனம் ஆட கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்த திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தினர், தேர்தல் வரும்போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்டோர் போல் வேடமணிய மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் தெரிகிறோம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.



கோவை: தேர்தல் வரும்போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்டோர் போல் வேடமணிய மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் தெரிகிறோம் என திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தின் கோவையில் உள்ள தனியார் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது சங்கத்தின் மாநில தலைவர் அஜித்ராஜா பேசியதாவது, 







கோவில்களில் ஆபாச நடனம் ஆட கூடாது என எங்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோவில்களில் ஆபாச நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. 

இது ஒரு மகிழ்ச்சிகரமான தீர்ப்பு. அதற்கு அந்த நீதியரசர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே தங்கள் தொழில் இருக்கும். அதில் வரும் வருமானத்தை கொண்டு தான் அடுத்த ஆறுமாதம் வாழ்வாதாரம் இருக்கும். தேர்தல் வரும்போது மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் தெரிகிறோம். 

தேர்தல் வரும் போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்டோர் போல் வேடமணிய நாங்கள் தென்படுகிறோம். அதை தவிர்த்து அரசு சார்பில் எங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை எவ்வித நலவாரியமும் அமைக்கப்படவில்லை.

கரகாட்டத்தில் ஆபாசம் தலைவிரித்து ஆடுகிறது, அதற்கு அங்கீகாரம் உள்ளது. ஆனால் தங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை. தற்போது வரை நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அழிவு நிலையில் இருந்த எங்களின் நிலைமை தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் இனி உயரும் என நம்புகிறோம். 

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட கலைக்குழுக்களுக்கு மட்டும் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். மேலும் குறிபிட்ட குழுக்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். ஆபாச நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு பணம் கொடுக்க பலரும் தயாராக உள்ளார்கள்.

ஆனால், நாங்கள் எல்லாம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், எங்களுக்கு நல்ல தொகை கொடுக்கவோ, உதவி புரியவோ யாரும் முன்வருவதில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...