உடுமலையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்!

நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



திருப்பூர்: உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜி சங்கர் ஆலோசனைப்படி உடுமலை நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி விடுதியில் பள்ளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 



உடுமலை நகர பொறுப்பாளர், திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ராமன் தலைமையில் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காந்தி ஆசிரமம் உண்டு உறைவிட பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மகாத்மா காந்தி விடுதிக்கு 25 டம்ளர்கள் வழங்கப்பட்டது.

உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன், இணைச் செயலாளர் சையது இப்ராஹிம், உடுமலை ஒன்றிய தலைவர் அபுதாகிர், உடுமலை ஒன்றிய செயலாளர் முகமது அசாரூதீன், உடுமலை ஒன்றிய இணைச் செயலாளர் அக்பர் பாஷா, ஒன்றிய இணைத்தலைவர் ரியாஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...