அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனரை சஸ்பெண்ட் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தனியார் ஆலைகளுக்கு ஆதரவாகவும், ஊழியர்களை ஒருமையில் நடத்தி வரும் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனர் சண்முகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 62 ஆண்டுகால பழமையான சர்க்கரை ஆலையாகும். இந்த நிலையில் தற்போது ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சர்க்கரை ஆலை மிக விரைவில் மூடப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. 



இந்நிலையில், ஊழியர்களை ஒருமையில் நடத்தி வரும் மேலாண் இயக்குனரை பணிநீக்கம் செய்யக்கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு கரும்புகளுடன் விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து, விவசாயிகள் விளைவித்த கரும்பை முழுமையாக அரவை செய்ய வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும், பதினைந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். 



கூடுதலாக கரும்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். பயிர் கடன் வழங்க வேண்டும். அமராவதி பிரதான கால்வாயில் கரும்பு பயிருக்கான உயிர் தண்ணீர் 21 நாட்களுக்கு விட வேண்டும், ஆலையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது மேலாண்மை இயக்குனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...