கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் துவங்கியது

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். 



கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பின்னர் இந்த 18 பேரும் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். 



இத்தேர்தல் முடிக்கப்பட்டு 28ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று நடைபெறும் தேர்தலில் 100 மாநகராட்சி கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளில் உள்ள 196 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் உள்ள 511 கவுன்சிலர்கள் எம மொத்தம் 824 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...