கோவை தடாகம் புறகாவல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன்!

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்ட தடாகம் புறகாவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.



கோவை: தடாகம் புறகாவல் நிலையம் திறப்பு விழாவில் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். 

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே துடியலூர், ஆனைக்கட்டி, பன்னிமடை, மருதமலை மற்றும் கோவை செல்லும் 5 வழியில் சாலைகள் உள்ளன. இந்த இடம் மிகவும் முக்கிய இடமாக இருப்பதால் தடாகம் காவல் நிலையம் சார்பில் கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே புறகாவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 



இதனை வி.கே.வி. குழும நிர்வாக தலைவர் மற்றும் நஞ்சுண்டபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ், பன்னிமடை ஊராட்சித்தலைவர் பி.எஸ்.எம்.ரத்தினம் மருதாசலம், ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பலரது உதவியுடன் புதிய புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டது. 



கணுவாய், சோமையனூர், ஆனைகட்டி சாலை பகுதிகள் வரை சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டு இந்த புறகாவல் நிலையத்தில் பார்க்கும்படி செய்யப்பட்டுள்ளது. 



கழிவறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த புறகாவல் நிலையத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்ததுடன் சி.சி.டி.வி கேமரா வேலை செய்யும் டிவியை பார்வையிட்டு நோட்டு புத்தகத்தில் கையெப்பமிட்டார்.



நஞ்சுண்டபுரம் ஊராட்சி தலைவர் கார்த்திகேஸ்வரி வி.கே.வி.சுந்தரராஜ், போக்குவரத்து ஆய்வாளர் வசந்தி, வி.கே.வி.சுந்தரராஜ், பி.எஸ்.எம்.மருதாசலம் உள்ளிட்டவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். 



இந்த நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன், துடியலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தடாகத்தில் இருந்து டி.என்.வேலுச்சாமி, ஆனந்தன், திமுக ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார், நஞ்சுண்டபுரம் ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, பன்னிமடை ஊராட்சி துணைத்தலைவர் அருள்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பாரதி செல்வம், முருகேஷ், இளையராஜா, மனோகரன், மோகன்ராஜ், கோபால்சாமி, டி.டி.எஸ்.மூர்த்தி, தனக்குமார், சோமையம்பாளையம் துரைசாமி, அகிலபாரத இந்துமகா சபா தேசிய ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், கணுவாய் தேவராஜ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர். 

கலந்துக்கொண்ட அனைவரும் சிறப்பிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. 



இதற்கான ஏற்பாடுகளை தடாகம் எஸ்.ஐ ஆறுமுக நயினார், சிறப்பு போலீஸ் செல்லக்கண்ணு உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வி.கே.வி. குழுமத்தை சேர்ந்த மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...