ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திட்டவட்டம்!

திருப்பூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஸ்மார்ட் சிட்டி உட்பட அனைத்து திட்டங்களும் மக்கள் வரிப்பணத்தில் கொண்டு வரக்கூடியவை என்றும், இதில் எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.



திருப்பூர்: மக்கள் வரிப்பணத்தில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களில் எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவில் வழி பேருந்து நிலையம் ரூ.26 லட்சத்தில் புதுப்பிக்கப்படுவதற்கான பணி மற்றும் நடராஜ் திரையரங்கம் அருகே 14 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. 



இதில் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். 



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, 







பல்வேறு வசதிகளை கொண்டதாக கோவில் வழி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படுகிறது. அதேபோல் திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நடராஜ் திரையரங்கம் அருகே 14 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படுகிறது. இவை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திமுக முத்திரை கொடுக்கப்படுவதாக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமானாலும் மக்கள் வரிப் பணத்தில் செய்யக்கூடிய பணிகள். இதில் எந்த வித அரசியல் முத்திரை குத்தப்படுவதற்கான நோக்கம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...