கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா பணியிடை நீக்கம்!

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், அவரை தனியார் பேருந்து நிறுவனம் பணியிடை நீக்கம் செய்யதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



கோவை: கோவையின் முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனியார் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில், அவரை தனியார் பேருந்து நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஷர்மிளா கூறியதாவது, 







காலையில் கனிமொழி எம்பி என்னை பார்ப்பதற்காக வந்து பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு தான் பேருந்தில் பயணம் மேற்கொண்டார், இந்நிலையில் பேருந்தில் இருந்த பெண் நடத்துனர் மனம் வருத்தப்படும்படி அவரிடம் பேசினார். அப்போது நான் அவரிடம் இவ்வாறு பேச வேண்டாம் என்று தெரிவித்தேன். 

இது குறித்து எனது முதலாளியிடம் தெரிவிக்கும்போது உனது பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருவரையும் அழைத்து வருகிறாய் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கனிமொழி பேருந்தில் வரும் விஷயமே தங்களுக்கு தெரியாது என்று முதலாளி கூறுகிறார் ஆனால் கனிமொழி வருவது குறித்து நான் ஏற்கனவே அவரிடமும் மேனேஜரிடமும் தெரிவித்திருந்தேன். 

இந்த வாக்குவாதம் நிகழும் போது எனது அப்பாவும் உடன் இருந்தார். அப்போது எனது அப்பா கோபத்தில் நான் பைத்தியக்காரனா என்று வார்த்தை விடவே ஓனர் உனது பிள்ளையை அழைத்துக் கொண்டு போ என்று எனது தந்தையிடம் கூறினார். எனவே நாங்கள் வருகிறோம் என்று கூறிவிட்டு வந்து விட்டோம். 

எப்போதும் எனக்கு ஆதரவாக பேசுபவர் இன்று எனக்கு எதிராக பேசியது மன வருத்தத்தை அளித்தது. வானதி சீனிவாசன் சொல்லாமலேயே வந்தார் ஆனால் கனிமொழி கூறிவிட்டு வந்தார். ஒரு ஓட்டுநரின் நிலைமை இதுதான் என்பதுதான் எனது மனதில் உறுத்தி கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...