பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் - நடத்துனர் கூறுவது என்ன?

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளா தனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை, நான் வேலையை விட்டு போகிறேன் என கூறிவிட்டு சென்றதாக அதே பேருந்தில் வேலை பார்த்து வந்த பயிற்சி பெண் நடத்துனர் அன்னத்தாய் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையின் முதல் பேருந்து நடத்துனர் ஷர்மிளா தாமாகவே வேலையை விட்டு செல்வதாக கூறியதாக பயிற்சி பெண் நடத்துனர் அன்னத்தாய் தெரிவித்துள்ளார். 

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் குறித்து பேருந்தில் இருந்த பயிற்சி பெண் நடத்துனர் அன்னத்தாய் கூறியதாவது, 

நான் பயிற்சி நடத்துனராக இருக்கிறேன். இன்று கனிமொழி எம்பி வந்தார். நான் அவரிடம் இது போன்று நடத்துனர் பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்து பயண சீட்டிற்கு காசு கேட்டேன். அப்போது ஷர்மிளா நீங்கள் ஒன்றும், காசு தர வேண்டாம் நான் எடுக்கிறேன் எனது அப்பா தருவார் என்று கூறினார். 

அப்போது நான் கனிமொழி அவர்களுக்கு எதற்கு செலவு வைக்க வேண்டும் என்று நினைத்து நமது கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணி அவரிடம் பயணச்சீட்டுக்கு காசு கேட்டேன். அப்போது கனிமொழி சிரித்துக்கொண்டே எனது உதவியாளர் தருவார் என்று கூறினார். 

அப்போது இரண்டு நபர்கள் 120 ரூபாய் கொடுத்துவிட்டு ஆறு பயணச்சீட்டு வாங்கினார்கள். பிறகு பேருந்தில் கனிமொழியிடம், முதல்வர் அப்பா நன்றாக உள்ளாரா எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று பேசினேன். அப்போது கனிமொழி எம்பி, எல்லோராலும் மக்கள் பணி செய்ய முடியும் அதற்கு சான்றாகத்தான் சர்மிளா விளங்குகிறார் என்று கூறினார். 

பிறகு கனிமொழியும் ஷர்மிளாவும் இறங்கிவிட்டனர். அதனைத் தொடர்ந்து வேறு ஒரு ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். பேருந்து சோமனூர் சென்று வந்த பிறகு மீண்டும் இறங்கிய இடத்திலேயே ஷர்மிளா ஏறினார். பிறகு திடீரென்று நான் பேருந்தில் இருந்து இறங்குகிறேன் எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை என்று கத்தினார். 

உடனடியாக நான் ஷர்மிளாவிடம் என்னால் தான் இறங்குகிறாயா என்று அவரிடம் நானாக பலமுறை மன்னிப்பு கேட்டேன். அப்போது அவர் உங்களுக்கும் எனக்கும் எந்தவித பேச்சும் கிடையாது என்று என்னிடம் தெரிவித்தார். 

அப்போது கூட நான் அவரிடம் என்னால் நீங்கள் இறங்கினால் எனது வேலை பறி போய்விடும் எனவே உங்களுடைய கண் பார்வையை மீறி இனி நான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறினேன். 

அப்போது ஷர்மிளா என்னிடம் நீங்கள் சுயநலமாக பேசுகிறீர்களா உங்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக நான் இறங்காமல் இருக்க வேண்டுமா. எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை நான் அலுவலகத்தில் சென்று பேசிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...