பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் - தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு கூறுவது என்ன?

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, அவருடன் பெண் நடத்துனரை பணியமர்த்த வேண்டாம் என்று கூறியதாகவும், பெண் நடத்துனரை பணியமர்த்தியது பிடிக்காமல், தாமாக வந்து வேலை விட்டு செல்வதாக கூறினார் என தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு தெரிவித்துள்ளார்.



கோவை: பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவை நாங்கள் சஸ்பெண்ட் செய்யவில்லை, அவராகவே தான் வேலையை விட்டு சென்றார் என தனியார் பேருந்து நிறுவன மேலாளர் ரகு தெரிவித்துள்ளார். 

பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் குறித்து மேனேஜர் ரகு கூறியதாவது, 

மூன்று மாதமாக ஷர்மிளா பேருந்தை இயக்கி வருகிறார். வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை. மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு பெண் நடத்துனர் அவர்களாகவே வந்து சேர்ந்தார். ஷர்மிளா எந்த பெண் நடத்துனரையும் தன்னுடன் பணியில் அமர்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். 

அவர் ஓட்டும் பேருந்தில் ஒரு பெண் நடத்துனரை பணியில் அமர்த்தினேன். பெண் நடத்துனரை அமர்த்தினார் என் பாப்புலாரிட்டி போய்விடும் என என்னிடம் ஷர்மிளா பேசினார். அனைவருக்கும், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரிடம் சொன்னேன். 

இதனையடுத்து, கடந்த வியாழக்கிழமை முதல் மூன்று நாட்கள் ஷர்மிளா வேலைக்கு வரவில்லை. காரணம் கேட்ட போது பெண் நடத்துனரை வேலைக்கு எடுத்ததால், அவர் கடந்த வியாழக்கிழமை பணிக்கு வரவில்லை என மற்ற பணியாளர்கள் என்னிடம் சொன்னார்கள். 

இன்று கனிமொழி எம்.பி. வந்ததால் அவர் பணிக்கு வந்தார். அவர் இறங்கியவுடன் ஷர்மிளாவும் இறங்கி விட்டார். ஷர்மிளாவின் புகழ் குறைந்து விடக்கூடாது என்பதால் பிரச்சனை செய்வதாக தெரிவித்தார்.

நான் வேறொரு ஓட்டுநரை அனுப்பி பேருந்து சோமனூர் போய்விட்டு திரும்பி வரும்போது ஷர்மிளா ஏறி அலுவலகம் வந்தார். வந்தவர் நான் வேலைக்கு வரலைன்னு சொல்லிட்டு போய்விட்டார். நாங்கள் வேலைக்கு வரவேண்டாம் என சொல்லவில்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுப்பது அவருக்கு பிடிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...