பெண் பேருந்து ஓட்டுநர் விவகாரம் - தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் கூறுவது என்ன?

கோவை பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, திமுக எம்பி கனிமொழி வரும் தகவலை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருக்காது. அவர் இப்போதும் பணியில் தான் இருக்கிறார் என வி வி பஸ் சர்வீஸ் உரிமையாளர் துரை கண்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா தற்போதும் பணியில் தான் உள்ளார் என தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா வேலையில் இருந்து நிறுத்தப்பட்டது குறித்து விவி பஸ் சர்வீஸ் நிறுவன உரிமையாளர் துரை கண்ணன் கூறியதாவது,

ஷர்மிளா மற்றும் அவரது அப்பா இருவரும் வந்து கோபமாக பேசிவிட்டு நாங்கள் போகிறோம் என கூறிவிட்டு சென்றார்கள். அதுவரை எனக்கு என்ன விஷயம் என்றே தெரியாது. 

கனிமொழி வரும் பொழுது இது குறித்து என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாமே என்று தான் அவரிடம் நான் கூறினேன். தற்போதும் ஷர்மிளா பணியில் தான் உள்ளார், 

அவர் தான் பாதியில் இறங்கிச் சென்று விட்டார். நான் அவரது தந்தையை இதுவரை பார்த்தது கூட இல்லை, இன்று தான் பார்த்தேன். ஷர்மிளா வேலைக்கு சேரும்பொழுது பார்த்தேன் பிறகு இடையில் ஒரு முறை செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும் பொழுது பார்த்தேன்.

அடுத்தபடியாக இன்று தான் அவரை பார்க்கிறேன். எம்.பி. வரும் பொழுது முன்னாலேயே தெரிவித்து இருந்தால் இது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து இருக்காது என்று தான் அவரிடம் கூறினேன். 

வானதி சீனிவாசன் வந்ததும் எனக்கு தெரியாது இன்று கனிமொழி வந்ததும் எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...