கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனருக்கு கார் வழங்கிய கமல்ஹாசன்!

கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுனரான ஷர்மிளா சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.



கோவை: கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 

கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவின் துணிச்சலை கண்டு வியக்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு கோவையில் மிகவும் பிரபலமானவர் ஷர்மிளா. தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது வாகனத்தில் பயணிக்கும் பயணிகள், இவருக்கு ரசிகர்களாக மாறி செல்பி புகைப்படம் எடுத்து செல்வதுமாக இருந்து வந்தனர். 

இந்நிலையில் சமீபத்தில் இவரது பேருந்தில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பயணித்து விட்டு, பெண் ஒருவர் ஓட்டுனராக உள்ள பேருந்தில் பயணிப்பது பெருமையாக இருப்பதாக கூறி ஷர்மிளாவை பாராட்டிவிட்டு சென்றார். 

இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளரும். எம்.பியுமான கனிமொழியும் சமீபத்தில் அவரது பேருந்தில் பயணித்து விட்டு, அவரை பாராட்டி, கடிகாரம் ஒன்றையும் பரிசளித்து விட்டு சென்றார்.

இந்நிலையில், அவர் பணியாற்றி வந்த தனியார் பேருந்து நிறுவனம் அவரை பணிநீக்கம் செய்து விட்டதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. 



இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். ஷர்மிளாவை நேரில் அழைத்து பாராட்டி, அவரது கமல் பண்பாட்டு மையம் சார்பில், புதிய கார் ஒன்றையும் பரிசாக அளித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...