விசாரணை கைதியாக 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள கணவர் - ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்த மனைவி!

கோவையை சேர்ந்த சுலைமான் என்பவரை குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்து 10 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் வைத்துள்ள நிலையில், வழக்கில் விசாரணையும் நடத்தாமல், ஜாமீனிலும் விடுவிக்காமல் இருப்பதாகவும் கூறி உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது மனைவி பாத்திமா ஸ்ட்ரெச்சரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை: விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை 10 ஆண்டுகளாக வெளியிடவில்லை என்றும் வழக்கை விரைவாக நடத்தி கணவரை விடுதலை அல்லது ஜாமீனில் விட வேண்டும் என்று வலியுறுத்தி உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கணவர் சுலைமான் என்பவர் குண்டு வெடிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

இதனிடையே கணவர் வழக்கில் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை நெடுநாட்களாக சிறையில் வைத்திருப்பதாகவும், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் அல்லது சுலைமானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாத்திமா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்தார்.

இது குறித்து பாத்திமா கூறியதாவது, எனது கணவர் சுலைமான் மீது வழக்கு பதிவு செய்யாமலேயே கடந்த பத்து வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கோவையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்டவரை இதுவரை வெளியில் விடாமல், வழக்கும் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

உடல் நிலை மோசமாகி படுத்த படுக்கையாக இருக்கிறேன். எனது கணவரை குறைந்தபட்சம் ஜாமீன் கொடுத்தாவது வெளியே அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பாத்திமா வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...