உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் - எஸ்.பி. பங்கேற்பு!

போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, உடுமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்டம் எஸ்.பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கலைக்கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, இன்றைய காலத்தில் போதை பொருள் பழக்கத்தால் பல்வேறு இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். வாழ்வில் முன்னேற்றம் அடையாமல் பல இளைஞர்கள் தடம் மாறி உள்ளனர்.



போதை பொருள் என்னும் பழக்கம் இன்றைய இளம் தலைமுறைகளை அதிகளவு பாதித்தது என்பது குறிப்பிடலாம். ஆகையால் இனி வரும் காலங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். à®‡à®µà¯à®µà®¾à®±à¯ அவர் பேசினார். 

இறுதியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. 



நிகழ்வில் உடுமலை காவல் ஆய்வாளர்கள் ராஜ் கண்ணா மற்றும் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...