சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் - திருப்பூரில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி!

திருப்பூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாநகர காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் மற்றும் கடத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.சி.அரசு மேல்நிலை பள்ளியில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.



முன்னதாக மாணவர்கள் மத்தியில் போதை பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. 



தொடர்ந்து பேரணியை மாநகர காவல் ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



பேரணியில் போதை பொருளால் ஏற்பட கூடிய விளைவுகள் குறித்த பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். 

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, உதவி ஆணையர் கார்த்திகேயன், காவல் ஆய்வாளர்கள், கணேசன், சிவசங்கரி, உள்ளிட்ட காவலர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...