காதர்பேட்டை பனியன் சந்தை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மேயர் நேரில் ஆறுதல்!

காதர்பேட்டை பனியன் சந்தையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த தீவிபத்து குறித்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களை மாநகராட்சி மேயர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

காதர் பேட்டை பனியன் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் 50 கடைகள் எரிந்து சேதம் அடைந்தது. 



சுமார் ஒரு கோடி ருபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் தீ விபத்து நடந்த இடத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். 



அதனை தொடர்ந்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் எந்தெந்த உதவிகள் செய்ய முடியுமோ அவை அனைத்தும் செய்து தருவதாக வணிகர்களுக்கு உறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...