திருமுருகன்பூண்டி கோவிலின் 100 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி - ஆட்சியரிடம் பாஜக மனு!

திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு ராக்கியபாளையத்தில் சொந்தமான 100 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலத்தை வெளியூர் நபர்கள் அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சிகள் நடப்பதாக திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் ராக்கியபாளையம் கிராமத்தில் 8 ஏக்கர் உள்ளது. 

இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இடத்தை வெளியூரை சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் சென்று கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். 

மேலும் இடத்தை அபகரிக்க துடிக்கும் நபர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அதிகாரி முன்னிலையில் மிரட்டி வருகின்றனர். எனவே கோவில் சொத்தையும் பொது மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...