கோவையில் காவல்துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவையில் மாநகர காவல்துறை சார்பில் 'எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் போதை' என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.



கோவை: கோவையில் மாநகர காவல்துறை சார்பில் "எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் போதை" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 



அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல்துறை கோவை மாநகராட்சியுடன் இணைந்து யங் இந்தியா அமைப்பினருடன், போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்பட்டது.



இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி மாணவர்கள், இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பாடல்கள், நாடகங்கள், ஆர்கெஸ்ட்ரா, மைம் ஷோ போன்றவற்றை அரங்கேற்றினர். #drugfreekovai என்ற தலைப்பில் "எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் போதை" என்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



முன்னதாக போதைப் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டு, கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. 



இந்நிகழ்வில் ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், உட்பட காவல் அதிகாரிகள், யங் இந்தியா அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். 



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், இதுபோன்ற விழிப்புணர்வு கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.

முதல் நாள் என்பதால் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு சிலரை டிராஃபிக் பூங்காவிற்கு அழைத்துச் சென்று விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் தொடர்ந்து அறிவுரையுடன் அமலாக்கம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...