துடியலூரில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகள் சார்பில் உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை துடியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தொடங்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே உலக போதை பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிகள் சார்பில் உலக போதைப்பொருட்கள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் அறிவுறுத்தல்படி நடைபெற்ற இந்த பேரணியை துடியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தொடங்கி வைத்தார். 



இந்த பேரணியானது துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கி வடமதுரை, துடியலூர் காவல் நிலையம், சந்தை பகுதி வழியாக மீண்டும் பேருந்து நிறுத்தம் வந்தடைந்தது. இந்த பேரணியின் போது ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். 



மேலும் பொதுமக்களிடம், போதை பழக்கத்தால் உடல் நலம், மன நலம், குடும்ப நலம், சமூக நல பாதிப்புகள் மற்றும் தொழில், பொருளாதார பாதிப்புகள் ஏற்படுதாகவும், சட்டப்பிரச்சனைகள் வருவதாகவும் கூறி போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்தான நோட்டீஸ்களையும் விநியோகம் செய்தனர். 

இந்த பேரணியில் துடியலூர் சிறப்பு துணை ஆய்வாளர்கள் சரவணன், சின்னராஜ், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி என்.எஸ்.எஸ் தலைவர் கேசவசாமி, என்.எஸ்.எஸ் ஆசிரியர்கள் மாரியப்பன், ஜெயபிரகாஷ், ஸ்ரீஜா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ் ஆசிரியர்கள் கார்த்தி, வினோ, கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு இயக்க ஆசிரியர்கள் பூபால்ராஜ், வெங்கடேஷ், சந்தோஷ், அசோக் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...