பல்லடத்தில் போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், பல்லடத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: பல்லடத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பல்லடம் உட்கோட்ட காவல்துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு "say no to drugs" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இந்த பேரணியை பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சவுமியா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். 



பல்லடம் நால்ரோடு பகுதியில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, காந்தி ரோடு வழியாகச் சென்று அரசு கல்லூரி அருகே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. 



இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். 

இந்த விழிப்புணர்வு பேரணியில், டாக்டர்கள் ராஜ்குமார், ராமசாமி, காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், சரஸ்வதி, பர்வீனா பானு, மற்றும் போலீசார், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...